எம்.எல்.ஏ பயோபிக்கில் சமுத்திரக்கனி

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் சமுத்திரக்கனி தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். இப்போது ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’, ‘கேம் சேஞ்சர்’ படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர், கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரின் பயோபிக்கில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தெலங்கானா மாநில முன்னாள் எம்.எல்.ஏ கும்மாடி நர்சய்யா. இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) புதிய ஜனநாயகம் கட்சியை சேர்ந்த இவர், எல்லண்டு (Yellandu) தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு ஐந்து முறை எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களின் மனிதன் என்று அழைக்கப்படும் இவருக்குச் சொந்த வீடு கூட இல்லை. எம்.எல்.ஏ.ஆனபோதும் சைக்கிள், பேருந்துகளிலேயே பயணம் செய்து வந்துள்ளார். இவர் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது. இதில் சமுத்திரக்கனி நடிக்க இருப்பதாகத் தெலுங்கு திரையுலகில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்