ஹீரோவானார் ஆர்ஜே விஜய்

By செய்திப்பிரிவு

எஃப்எம் ரேடியோவில் ஆர்ஜேவாக இருந்த விஜய், படங்களில் ஹீரோக்களுக்கு நண்பராக நடித்து வந்தார். சின்னத்திரை நிகழ்ச்சி மற்றும், திரைப்பட விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இவர் ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படத்தை ‘டாடா’ படத்தைத் தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிக்கிறார். படத்தை அறிமுக இயக்குநர் ஹேமநாதன் இயக்குகிறார். கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். ஜென் மார்டின் இசை அமைக்கிறார்.

படம்பற்றி ஹேமநாதனிடம் கேட்டபோது கூறியதாவது:

ஹீரோ, ஹீரோயின் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். அதற்குப் பிறகு
அவர்கள் வாழ்க்கை எப்படிச் செல்கிறது என்பதுதான் இந்தப் படம். இன்றைய காலகட்ட வாழ்க்கையை சுவாரஸ்யமாகச் சொல்லும் கதை இது. இந்தப் படத்தின் மூலம் ஆர்ஜே விஜய், ஹீரோவாக அறிமுகமாகிறார். கதைப்படி நாயகன் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கிறார். அதனால் ஒரு ஹீரோவை, நிகழ்ச்சி தொகுப்பாளராக நடிக்க வைப்பதை விட, நிகழ்ச்சி தொகுப்பாளரையே ஹீரோவாக்கினால் கதைக்குப் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தோம். நாயகியாக ‘டாணாக்காரன்’ அஞ்சலி நாயர் நடிக்கிறார். கதையில் அவர், பாடகியாக வருகிறார். ரெடின் கிங்ஸ்லி, மைத்ரேயன், கல்யாணி நடராஜன், லல்லு, கதிர் உட்பட பலர் நடிக்கின்றனர். சென்னையில்தான் மொத்த கதையும் நடக்கிறது. படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.இவ்வாறு ஹேமநாதன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்