“வலிமையான கதைகளைப் பேசலாம்” - தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகை சமந்தா

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகை சமந்தா புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்தத் தளத்தின் மூலமாக “சமூக கட்டமைப்பில் உள்ள வலிமையானதும், சிக்கலானதுமான கதைகளைப் பேசலாம்” என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் (Tralala Moving Pictures) என்கிற என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். புதிய சிந்தனைகள் அடங்கிய கன்டென்டுகளை முன்னிலைப்படுத்துவதே இதன் நோக்கம். நமது சமூக கட்டமைப்பின் வலிமையானதும், சிக்கலானதுமான தன்மைகள் கொண்ட கதைகளை இந்தத் தளம் ஊக்குவிக்கும். அதேசமயம் படைப்பாளிகள் உண்மையான, அர்த்தமுள்ள உலகளாவிய படைப்புகளை வெளிப்படுத்த இந்தத் தளம் உதவியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் சிறுவயதில் கேட்டு ரசித்த ‘பிரவுன் கேர்ள் இன் தி ரிங் நவ்’ என்ற ஆங்கில பாடலில் இருந்து ஈர்க்கப்பட்டு 'ட்ராலாலா' என்ற பெயரை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். சிகிச்சை காரணமாக நடிப்புக்கு ஒரு சின்ன ப்ரேக் எடுத்துள்ளார். அவர் நடிப்பில் கடைசியாக ‘குஷி’ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்