‘தா’, ‘வில் அம்பு’ போன்ற படங்களை இயக்கிய ரமேஷ் சுப்ரமணியம், பிக் பேங் சினிமாஸ் மூலம் தயாரித்து இயக்கும் படத்தில் விக்ராந்த் -யோகிபாபு இணைந்து நடிக்கின்றனர். பவித்ரா மாரிமுத்து கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் இனிகோ பிரபாகர், மிப்புசாமி, குமார் நடராஜன் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். பால முரளி பாலு இசையமைக்கிறார். கேகே ஒளிப்பதிவு செய்கிறார். ஏவி.எம் ஸ்டூடியோவில் நடைபெற்ற இந்தப் படத்தின் பூஜையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டு துவக்கிவைத்தார். கலைப்புலி தாணு, ஃபைவ் ஸ்டார் கதிரேசன், இயக்குநர் சுசீந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
படம் பற்றி ரமேஷ் சுப்ரமணியம் கூறும்போது, “இது சைக்கலாஜிகல் திரில்லர் திரைப்படம். இதன் திரைக்கதை வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. ஏவி.எம் ஸ்டூடியோவில் 1950களில் இருப்பது போன்ற பிரம்மாண்ட பங்களா செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago