முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைத் தமிழ் திரையுலகம் சார்பில் 'கலைஞர் 100' என்ற பெயரில் நடத்த திட்டமிட்டுள்ளனர். வரும் 24-ம் தேதி, சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இந்த விழாவை நடத்த முடிவு செய்திருந்தனர். அன்று, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் என்பதால், தேதியை மாற்றக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கிடையே வரும் 17-ம் தேதி சேலத்தில் நடைபெறுவதாக இருந்த திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு, வரும் 24-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கலைஞர் 100' விழா தேதி மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “மிக்ஜாம் புயலால் மக்கள் சிரமங்களுக்கு ஆளாகி உள்ளார்கள். தமிழக முதல்வரும் அரசு நிர்வாகமும் மக்களுக்கான நிவாரணப் பணிகளில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளார்கள். இவற்றைக் கருத்தில் கொண்டு 24-ம் தேதி நடைபெறவிருந்த கருணாநிதி நூற்றாண்டு விழா, ஜனவரி 6-ம் தேதி மாலை நடைபெறும்” என்று கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago