“கதை ரெடி... ‘கேஜிஎஃப் 3’-ல் யஷ் நிச்சயம் இருப்பார்!” - பிரசாந்த் நீல் உறுதி

By செய்திப்பிரிவு

பெங்களூரு: ‘கேஜிஎஃப் 3’ உருவாவது உறுதி என்றும், அதில் கண்டிப்பாக யாஷ் இருப்பார் என்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார்.

யாஷ் நடித்த ‘கேஜிஎஃப்’ படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் அடுத்து இயக்கியுள்ள படம், ‘சலார்; பார்ட் 1- சீஸ்பயர்’. கே.ஜி.எஃப் படத்தை தயாரித்த ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இதில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். ஸ்ருதிஹாசன் கதாநாயகியாகவும், பிருத்விராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர். ஜெகபதிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். டிச.22-ம் தேதி, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த நிலையில், இப்படம் தொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு பிரசாந்த் நீல் பேட்டியளித்துள்ளார். அதில் ‘கேஜிஎஃப் 3’ படம் குறித்த தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். அப்பேட்டியில் அவர், “கேஜிஎஃப் மூன்றாம் பாகம் உருவாவது உறுதி. அதற்கான கதையும் ரெடியாகிவிட்டது. அதற்கான அறிவிப்பை வெளியிடும் முன் நாங்கள் கதையை தயார் செய்ய முடிவு செய்தோம். யஷ் மிகவும் பொறுப்பான நபர், வெறும் வியாபார நோக்கத்துடன் மட்டுமே எதையும் செய்யமாட்டார். ‘கேஜிஎஃப்’ மூன்றாம் பாகத்தை நான் இயக்குவேனா இல்லையா என்று தெரியாது. ஆனால், அதில் கண்டிப்பாக யஷ் இருப்பார்” என்று பிரசாந்த் நீல் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

48 mins ago

சினிமா

53 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்