ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ ரூ.425 கோடி வசூல்

By செய்திப்பிரிவு

மும்பை: ரன்பீர் கபூர் நடித்துள்ள ‘அனிமல்’ திரைப்படம் 4 நாட்களில் ரூ.425 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள ‘அனிமல்’ படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் அனில் கபூர், பாபி தியோல், சுரேஷ் ஓப்ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ப்ரீதம், விஷால் மிஸ்ரா, மனன் பரத்வாஜ், ஷ்ரேயாஸ் பூரணிக், ஜானி, ஆஷிம் கெம்சன் உள்ளிட்டோர் படத்துக்கு இசையமைத்துள்ளனர்.டி- சிரீஸ், சினி ஒன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அமீத் ராய் ஒளிப்பதிவு செய்துள்ளார். தந்தை - மகன் உறவைப் பேசும் இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படம் முதல் நாளில் ரூ.116 கோடி வசூலித்ததாக படக்குழு தெரிவித்திருந்தது. திருவிழா இல்லாத நாட்களில் படம் அதிகபட்ச வசூலை குவித்துள்ளதாக படக்குழு தெரிவித்தது. இந்நிலையில், தற்போது படம் வெளியாகி 4 நாட்கள் கடந்த நிலையில், உலகம் முழுவதும் படம் ரூ.425 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

மேலும்