சண்டைக் காட்சியில் விபத்து: நடிகர் அஜய் தேவ்கன் காயம்

By செய்திப்பிரிவு

மும்பை: பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன். இவர் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் ராம் சரண் தந்தையாக நடித்தவர். இவர் நடித்த 'சிங்கம்' படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து அதன் அடுத்தடுத்த வரிசைப் படங்களில் நடித்து வருகிறார். இப்போது 'சிங்கம் எகைன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் கரீனா கபூர், தீபிகா படுகோன், ஷில்பா ஷெட்டி, பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

ரோஹித் ஷெட்டி இயக்கும் இதன் படப்பிடிப்பு மும்பையில் உள்ள விலே பார்லே பகுதியில் நடந்து வருகிறது. அங்கு சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் படப்பிடிப்பில் எதிர்பாராமல் நடந்த விபத்தில் நடிகர் அஜய் தேவ்கனின் கண்ணில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் அவர் பங்கேற்காத காட்சிகள் படமாக்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

36 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்