துப்பாக்கி சத்தங்களுக்கு மத்தியில் ஒரு ஃபீல்குட்: ஷாருக்கானின் ‘டங்கி’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

மும்பை: ராஜ்குமார் இரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘டங்கி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

‘முன்னாபாய் எம்பிபிஎஸ்’, ‘3 இடியட்ஸ்’, ‘பிகே’ ஆகிய படங்களை இயக்கிய ராஜ்குமார் இரானி புதிதாக இயக்கியுள்ள படம் ‘டங்கி’. பதான், ஜவான் படங்களின் வெற்றிக்குப் பிறகு ஷாருக்கான் நடித்துள்ள இப்படத்தில் டாப்ஸி, போமன் இரானி, விக்கி கவுஷல் விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் டிச. 21-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் படக்குழு இன்று (டிச.05) வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - பான் இந்தியா என்ற பெயரில் துப்பாக்கி, பீரங்கி சத்தங்கள், ரத்த வன்முறை நிறைந்த ஆக்‌ஷன் படங்களுக்கு நடுவே நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஃபீல்குட் படம் பாலிவுட்டிலிருந்து வருவது சிறப்பு. இங்கிலாந்து செல்ல முயற்சி செய்யும் நான்கு பேர்களின் கதையை இப்படம் பேசுகிறது. நட்பை மையமாக இந்தப் படம் 90களில் நடப்பதாக ட்ரெய்லரின் காட்டப்படுகிறது. ஆங்கிலம் தெரியாததால் விசா மறுக்கப்படும் கதாபாத்திரங்கள், நாட்டின் எல்லையை சட்டத்துக்குப் புறம்பாக கடக்க முயற்சிக்கும்போது ஏற்படும் சிக்கல்களே படத்தின் கதை. ஷாருக்கான் வழக்கம் போல ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார். ராஜ்குமார் இரானியின் இயக்கம் என்பதால் வழக்கம்போல படத்தில் நகைச்சுவைக்கு இடம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

‘டங்கி’ ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

சினிமா

37 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்