லோகேஷ் கனகராஜின் ‘ரஜினி 171’-ல் சிவகார்த்திகேயன்?

By செய்திப்பிரிவு

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘ரஜினி171’ படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி ஹேஷ்டேகும் ட்ரெண்டாகி வருகிறது.

‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170-வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு (2024) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து ரஜினி நடிக்கும் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அன்பறிவு ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். அனிருத் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறி சமூக வலைதளங்களில் சிவகார்த்திகேயன், தலைவர் 171 ஆகிய ஹேஷ்டேகுகள் டிரெண்டாகி வருகின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு எதும் வெளியாகவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்