கருணாநிதி நூற்றாண்டு விழா தேதியை மாற்ற கோரிக்கை

By செய்திப்பிரிவு

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைத் தமிழ் திரையுலகம் சார்பில் ‘கலைஞர் 100’ என்ற பெயரில் நடத்த திட்டமிட்டுள்ளனர். டிச.24-ம் தேதி, சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இந்த விழா நடக்கிறது. டிச.24-ம் தேதி, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் என்பதால், அன்று இந்த விழாவை நடத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேதியை மாற்றக்கோரி, அனைத்துலக எம்.ஜி.ஆர் பொதுநல சங்கம் சார்பில், நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய வர்த்தக சபை ஆகியவற்றுக்குக் கோரிக்கை மனு அனுப்பப் பட்டுள்ளது.

அந்த சங்கத்தின் செயலாளர் பேராசிரியர் செல்வகுமார் அனுப்பியுள்ள மனுவில், “இந்த விழா, எம்.ஜி.ஆர் நினைவிடத்துக்கு அருகே அமைந்துள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. அன்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து அஞ்சலி செலுத்த வரும் எம்.ஜி.ஆர். அன்பர்களால் பதற்றம் உருவாக வாய்ப்பிருக்கிறது. இதனால் தேதியை மாற்றுமாறு கோரிக்கை வைக்கிறோம். இல்லை என்றால் எம்.ஜி.ஆர் பெயரில் இயங்கி வரும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் இணைந்து, நடிகர் சங்க அலுவலகம் முன்பு அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE