நடிகை கனகா உடனான படத்தைப் பகிர்ந்த குட்டி பத்மினி - வைரல் பதிவு

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகை குட்டினி பத்மினி தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகை கனகா உடனான தனது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கடந்த 1989-ம் ஆண்டு வெளியான ‘கரகாட்டக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் கனகா. பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளான இவர், தமிழில் ரஜினிகாந்த், சரத்குமார், விஜயகாந்த், பிரபு, ராமராஜன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் நடிகை கனகா. கடைசியாக தமிழில் 1999-ம் ஆண்டு வெளியான ‘விரலுக்கேத்த வீக்கம்’ படத்தில் மறைந்த நடிகர் விவேக்குக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு 2000-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘நரசிம்மம்’ படத்தில் நடித்திருந்தார். பின்னர் திரைத்துறையிலிருந்து விலகியிருந்த கனகா படங்களில் நடிக்கவில்லை.

இந்நிலையில், நடிகை குட்டி பத்மினி தனது எக்ஸ் தள பக்கத்தில், நடிகை கனகாவுடனான தனது புகைப்படங்களை பகிர்ந்து, “பல வருடங்களுக்குப் பிறகு என் அன்புக்குரிய தேவிகாவின் மகளும், என் அன்புக்குரிய சகோதரியுமான கனகாவை சந்தித்து மகிழ்ச்சி” என பதிவிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

மேலும்