சென்னை: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த விமர்சனத்தை முடித்துக் கொண்டு நடிகர் வனிதா விஜயகுமார் திரும்பிய போது கொடூரமாக தாக்கப்பட்டார். இதற்கு பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் காரணம் என அவர் குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த சூழலில் அது குறித்த பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, டெலிட் செய்துள்ளார் பிரதீப்.
“எனது போட்டியாளர்களுக்கு எதிராகவோ அல்லது யாருக்கும் எதிராகவோ நான் இல்லை. நான் இப்படித்தான் அவர்களுடன் பேசுகிறேன். வனிதா விஜயகுமார், உங்களுக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் உங்களுக்காக வருந்துகிறேன். ஓய்வு எடுக்கவும். ஜோவிகா புத்திசாலி. அவரால் அதை வெல்ல முடியும். அவருக்கு உங்கள் உதவி தேவையில்லை” என எக்ஸ் தளத்தில் பிரதீப் தெரிவித்துள்ளார். அதில் வனிதா விஜயகுமாருடனான தனது வாட்ஸ்அப் ஸ்கிரீன் ஷாட்டை அவர் பகிர்ந்துள்ளார். அதை தற்போது டெலிட் செய்துள்ளார்.
மேலும், இந்த விளையாட்டை விளையாட்டாக மட்டுமே தான் பார்ப்பதாகவும். நடப்பதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்றும் சொல்லி ஒரு பதிவை எக்ஸ் தளத்தில் பிரதீப் வெளியிட்ட நிலையில், அதனையும் டெலிட் செய்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமாரின் மூத்த மகள் ஜோவிகா கலந்து கொண்டுள்ளார். தனது மகளுக்கு ஆதரவாக வனிதா தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதுதவிர தனியார் ஊடகங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் தாக்கப்பட்டுள்ளார்.
» மதுரையில் தக்காளி விலை கிலோ ரூ.50-ஐ தொட்டது: தொடரும் மழையால் மீண்டும் விறுவிறு விலை உயர்வு
» ''தமிழக அரசியல் களத்தில் தேடும் நிலையில் அதிமுக உள்ளது'': பாஜக விமர்சனம்
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago