சென்னை: “‘சேரி’ என்பதற்கு பிரெஞ்சு மொழியில் அன்பானவர் அல்லது நேசிப்பவர் என்று பொருள்” என பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில்,“நான் பயன்படுத்திய மொழி தொடர்பாக சீற்றமடைந்து வந்த கூட்டத்தைப் பார்த்தது மிகவும் வேடிக்கையாக இருந்தது. பெண்களுக்கான பிரச்சினைகளின்போது இந்தக் கூட்டம் மவுனமாகிவிடுகிறது. படித்தும் படிப்பறிவில்லாதவர்களுக்கு இது குறித்து சொல்லித்தர விரும்புகிறேன். என்னுடைய ட்வீட்டை கிண்டலுடன் பதிவிட்டிருந்தேன். ‘சேரி’ என்பதற்கு பிரெஞ்சு மொழியில் அன்பானவர் அல்லது நேசிப்பவர் என்று பொருள்.
நான் அன்பை பகிர்ந்துகொள்கிறேன் என கிண்டலாக அந்த சூழலில் அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் முன்னணியில் இருப்பேன். பாகுபாடு என்பது உங்களின் அழுக்குப்படிந்த மூளையில் உள்ளது. என்னுடைய எதிர்வினை மூலமாக புகழ்பெற வேண்டும் என நினைத்து செய்யும் செயல்களுக்கு நீங்கள் தகுதியானவர்கள் அல்ல” என பதிவிட்டுள்ளார்.
பின்னணி: மன்சூர் அலி கான் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒருவருக்கு பதிலளித்த குஷ்பூ, “திமுக குண்டர்கள் இப்படியான மோசமான மொழியைத் தான் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது இது தான். சாரி, என்னால் உங்களைப் போல சேரி மொழியில் பேச முடியாது. ஆனால் என்ன நடந்தது, என்ன பேசினார்கள், என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கண் விழித்துப் பாருங்கள். மேலும் திமுக உங்களுக்கு சட்டங்களை கற்றுத்தரவில்லை என்றால், நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருப்பது வெட்கக்கேடானது” என பதிவிட்டிருந்தார். இதில் “உங்களைப் போல சேரி மொழியில் என்னால் பேச முடியாது” அவர் பயன்படுத்திய வார்த்தைக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
» கேரள பெண்கள் கிரிக்கெட் அணியின் தூதுவராக கீர்த்தி சுரேஷ் நியமனம்
» “பல்லு உதிரும்; எலும்பு உடையும்” - தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ முதல் சிங்கிள் எப்படி?
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
சினிமா
15 mins ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago