6 வருட இடைவெளி ஏன்? - அரிஷ் குமார் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: கஸ்தூரி ராஜா இயக்கிய ‘இது காதல் வரும் பருவம்’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அரிஷ் குமார். பிரபல படத்தொகுப்பாளர் கணேஷ்குமாரின் மகனான இவர், தொடர்ந்து மாத்தியோசி, கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, மிக மிக அவசரம் உட்பட பல படங்களில் நடித்தார். இவர் இப்போது அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள ‘லேபில்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

இதுதான் நான் நடித்துள்ள முதல் வெப் சீரிஸ். அருண்ராஜா காமராஜிடம் நான் தான் வாய்ப்புக் கேட்டேன். இதில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன். இந்த ‘லேபிள்’ மூலம் நான் ஒர் அடையாளத்தை உருவாக்கிக் கொள்வேன். கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன். இந்த இடைவெளி எனது தவறினால் நிகழ்ந்ததுதான். இப்போது அருண்ராஜாவிடம் வாய்ப்பு கேட்டது போல எனது நட்பு வட்டத்தில் இருப்பவர்களிடம் கேட்டு என்னை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் சென்றிருக்க வேண்டும். அதை உணர்வதற்குக் காலம் அதிகமாகவே ஆகிவிட்டது. அடுத்து ‘கண்ணதாசன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறேன். இதிலும் எனக்கு போலீஸ் அதிகாரி கேரக்டர். சுகன் குமார் என்பவர் இயக்குகிறார். இவ்வாறு அரிஷ் குமார் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE