மதுரை: பிரபல தமிழ் இயக்குநர் சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் காலமானார். அவருக்கு வயது 84.
இயக்குநரும் நடிகருமான சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் இன்று (நவம்பர் 16) அதிகாலை 6.30 மணிக்கு அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டத்தில் உள்ள பழையூர்பட்டியில் இருக்கும் அவரது வீட்டில் காலமானார். 84 வயதான அவர் சினிமா ஆப்பரேட்டராக பணிபுரிந்தவர். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது இறுதி சடங்குகள் பழையூர்பட்டியில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. சேரனின் தந்தை மறைவையொட்டி பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சேரனுக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர்.
தமிழில் பிரபல இயக்குநராக இருக்கும் சேரன், ‘பாரதி கண்ணம்மா’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘பாண்டவர் பூமி, ‘ஆட்டோகிராஃப்’, ‘தவமாய் தவமிருந்து’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போது கன்னடத்தில் கிச்சா சுதீப் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் சேரன்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago