பிரபலங்களின் வாழ்க்கைக் கதையைப் படமாக்குவது இப்போது அதிகரித்து வருகிறது. அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், நடிகர்களின் வாழ்க்கைக் கதையைப் படமாக்க திரையுலகினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் டெஸ்லா சிஇஓ, எலான் மஸ்கின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு திரைப்படம் உருவாக இருக்கிறது. இவரின் வாழ்க்கைக் கதையை அமெரிக்க எழுத்தாளர் வால்டர் ஐசக்சன் புத்தகமாக எழுதி வெளியிட்டிருந்தார். இந்தப் புத்தகம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
தென்னாப்பிரிக்காவில் ஏழை குடும்பத்தில் பிறந்து, எலான் மஸ்க் எவ்வாறு வெற்றி பெற்றார் என்பது அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அதை அடிப்படையாகக் கொண்டு, இந்த பயோபிக் உருவாகி வருகிறது. படத்தை ஏ 24 என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான உரிமையை வால்டர் ஐசக்சனிடம் இருந்து தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது. படத்தை ஹாலிவுட் இயக்குநர் டேரன் அரோனோஃப்ஸ்கி இயக்க இருக்கிறார். இவர், தி வேல், பிளாக் ஸ்வான், மதர் போன்ற திரைப் படங்களை இயக்கியவர். இந்தப் படத்தில், எலான் மஸ்க்கின் தனிப்பட்ட வாழ்க்கையும் காட்டப்படும் எனக் கூறப்படுகிறது. எலான் மஸ்க்காக யார் நடிக்கப் போகிறார் என்ற விவரம் தெரியவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
1 min ago
சினிமா
1 hour ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago