மும்பை: நடிகை தமன்னா, இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ வெப் தொடரில் நடித்தபோது காதலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. தங்கள் காதலை இருவரும் வெளிப்படையாக அறிவித்துவிட்டனர். இந்நிலையில் இவர்கள் திருமணம் பற்றி தமன்னாவிடம் கேட்டபோது, “திருமணம் என்ற அமைப்பின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்ளத்தான் இருக்கிறேன். இப்போது அதற்கான மனநிலை இல்லை. நடிப்பு இப்போது சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. அதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தமன்னாவின் வீட்டில் திருமண பேச்சுவார்த்தைகளைத் துவங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர் என்கிறார்கள். தமன்னா புதிய படங்கள் ஏதும் ஒப்புக்கொள்ளவில்லை. நடிகர் விஜய் வர்மா, தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago