ஆக்ரோஷம், அத்துமீறல், புரட்சி... -  ஜி.வி.பிரகாஷின் ‘ரெபல்’ டீசர் எப்படி?

By செய்திப்பிரிவு

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் ‘ரெபல்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். படத்தை இயக்குகிறார். மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி, ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப் படத்துக்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டது என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

டீசர் எப்படி? - படம் கேரளாவில் நடப்பதாக காட்டப்படுகிறது. கொத்தடிமை கூட்டம், பாட்டாளி மக்களின் ரத்தத்தை உறியும் சைத்தான்கள், சிவப்பு கொடி, புரட்சி இவையெல்லாம் படம் கம்யூனிசத்தை அடிப்படையாக கொண்டது என்பதை உணர்த்துகிறது. ஜி.வி.பிரகாஷை காணவில்லையே என தேடிக்கொண்டிருக்கும்போது, ‘தமிழுக்காகவே போராடி செத்தவன் ஒருத்தன் இருக்கான்’ என சொல்ல, ஆக்ரோஷமாக நடந்து வருகிறார். சமூக அக்கறையும், மக்கள் பிரச்சினைகளையும் அடிப்படையாக கொண்டு படம் உருவாகியிருப்பதை மொத்த டீசரும் உறுதி செய்கிறது. படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. டீசர் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE