ஹைதராபாத்: ‘கே.ஜி.எஃப்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து, இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள படம், 'சலார்'. பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். கே.ஜி.எஃப். படங்களைத் தயாரித்த ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் என்று கூறப்பட்டது. ஆனால், டிச. 22-ம் தேதி வெளியாவது உறுதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக சண்டைக் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. சண்டைக் காட்சிகளில் மட்டும் ஜீப்புகள், லாரிகள் உள்ளிட்ட 750 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரவி பஸ்ருர் இசை அமைக்கும் இந்தப் படத்தில் பிரபல இந்தி நடிகை சிம்ரத் கவுர் ஒரு பாடலுக்கு ஆட இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இவர், இந்தியில் சோனி, டர்ட்டி ஹரி, சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘கதர் 2’ படங்களில் நடித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago