சென்னை: சென்னையில் உள்ள ஏவிஎம் ஹெரிடேஜ் அருகாட்சியகத்தில் ‘மின்சார கனவு’ படத்தில் நடிகர் அரவிந்த் சாமி பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) கார் இடம்பெற்றுள்ளதை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த மே மாதம் சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோஸில் அமைக்கபட்டுள்ள ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இங்கு 1960-கள் தொடங்கி தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்பட்ட பைக், கார்கள் உள்ளிட்ட சினிமா தொடர்பான பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை தவிர, மற்ற நாட்களில் செயல்படும் இந்த அருங்காட்சியகம் காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணிக்கு மூடப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஹெரிடேஜ் மியூசியத்தில் ‘மின்சார கனவு’ படத்தில் நடிகர் அரவிந்த் சாமி பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் கார் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில், “எங்களின் அருங்காட்சியகத்துக்கு நடிகர் அரவிந்த் சாமி வந்ததில் மகிழ்ச்சியடைகிறோம். ‘மின்சார கனவு’ படத்தின் படப்பிடிப்பு குறித்தும் சினிமாவின் வரலாறு குறித்தும் அவர் எங்களுடன் பகிர்ந்துகொண்டார். ‘மின்சார கனவு’ படத்தில் அவர் பயன்படுத்திய கார் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது” என பதிவிடப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் ‘திருப்பதி’ படத்தில் நடிகர் அஜித்குமார் பயன்படுத்திய பஜாஜ் 180 சிசி பைக் அருகாட்சியகத்தில் சேர்க்கப்பட்டது. அதேபோல நேற்று (நவ.7) கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு ‘சகலகலா வல்லவன்’ படத்தில் ‘இளமை இதோ இதோ’ பாடலில் அவர் பயன்படுத்திய பைக்கும் பொதுமக்களின் பார்வைக்காக அருகாட்சியகத்தில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago