மும்பை: நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ள படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவதால் அவர் கவலை அடைந்துள்ளார்.
கங்கனா நடித்து கடந்த மாதம் 27ம் தேதி வெளியான திரைப்படம், தேஜஸ். சர்வேஸ் மேவாரா இயக்கிய இந்தப் படத்தில் கங்கனா, விமானப்படை அதிகாரியாக நடித்துள்ளார். படம் வெளியான முதல் நாளிலிருந்தே இந்தப் படத்துக்குக் கூட்டம் வரவில்லை. பல திரையரங்குகளில் கூட்டம் இல்லாததால், காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. ரூ.60 கோடியில் உருவான இந்தப் படத்தின் ஒரு வார வசூல் ரூ.5.5 கோடியை மட்டுமே. இந்தப் படத்தோடு சேர்ந்து கங்கனா நடித்துள்ள, 10 படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துள்ளன.
இதற்கு முன் அவர் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2, தாக்கட், தலைவி, பங்கா, ஜட்ஜ்மென்டல் ஹே கியா, சிம்ரன், ரங்கூன், கட்டி பட்டி, ஐ லவ் நியூயார்க் ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவி இருந்தன. இந்த தொடர் தோல்விகளால் நடிகை கங்கனா கவலை அடைந்துள்ளார். அடுத்து அவர் இந்திரா காந்தியாக நடித்துள்ள ‘எமர்ஜென்சி’ படம் வெளியாக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago