கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடித்த படம் 'ஜிகர்தண்டா'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்தில், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் வெளியாகி ரசிகர்களிடையேயும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகை நிமிஷா சஜயன் நாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்துக்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திக் சுப்புராஜ், தனது ஸ்டோன்பெஞ்ச் நிறுவனத்தின் மூலம் பைவ் ஸ்டார் கதிரேசனுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி?: ‘தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ’ என்ற ராகவா லாரன்ஸ் வசனத்துடன் 90களின் உடை அலங்காரத்தில் ட்ரெய்லரின் தொடக்கம் கவனம் பெறுகிறது. எஸ்.ஜே.சூர்யாவின் இன்ட்ரோவும், வசனங்களும் படத்தின் மீதான நம்பிக்கையை கூட்டுகின்றன. பின்னணியில் சந்தோஷ் நாரயணன் இன்னொரு ஹீரோவாக அதகளம் செய்கிறார். ஷைன் டாம் சாக்கோவின் என்ட்ரி சர்ப்ரைஸ்.
» 30 ஆண்டுகளுக்குப் பின் திரையில் ‘மணிச்சித்திரதாழு’ - கொட்டும் மழையில் குவிந்த கேரள ரசிகர்கள்
» “விஜய் ஒரு மகா கலைஞன்... அப்படித்தான் தலைவணங்கி முத்தம் கொடுக்கணும்” - மிஷ்கின் விளக்கம்
ட்ரெய்லரில் காட்டப்படும் செட்டு, உடை, இடங்கள் என மேக்கிங் கார்த்திக் சுப்பராஜ் இஸ் பேக் என சொல்ல வைக்கிறது. ஜிகர்தண்டா முதல் பாகத்தின் வெற்றியை சீர்குலைக்காமல் இப்படம் தடம் பதிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தீபாவளி 10-ம் தேதி படம் வெளியாகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
10 mins ago
சினிமா
27 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago