சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம், ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இதில் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். முக்கிய வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இறுதிகட்டப் பணிகளில் இருக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
நேற்று (நவ.03) ‘இந்தியன் 2’ படத்தின் அறிமுக டீசரை படக்குழு வெளியிட்டது. பிரம்மாண்ட செட்கள், கிராபிக்ஸ் என ஷங்கரின் அக்மார்க் விஷயங்கள் நிரம்பிய இந்த டீசர் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நிலையில், ‘இந்தியன் 2’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ‘இந்தியன் 2’ படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரலிலும், ‘இந்தியன் 3’ படத்தை அடுத்த தீபாவளி பண்டிகைக்கும் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் படக்குழு இதுகுறித்து அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை. ‘பாகுபலி’ பாணியில் க்ளைமாக்ஸ் காட்சியில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க படக்குழு விரும்புவதாக கூறப்படுகிறது.