மம்மூட்டி - ஜோதிகா இணைந்து நடித்துள்ள மலையாள படமான ‘காதல் தி கோர்’ திரைப்படம் வரும் நவம்பர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான மலையாள படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இப்படத்தை இயக்குநர் ஜியோ பேபி இயக்கியிருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கியுள்ள புதிய படம் ‘காதல் தி கோர்’. மம்மூட்டியுடன் நடிகை ஜோதிகா இணைந்து நடித்துள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடிகை ஜோதிகா மீண்டும் மலையாள படம் ஒன்றில் நடிப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கூட்டியுள்ளது. மம்மூட்டி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் கொச்சியை சுற்றி நடைபெற்றது. படபிடிப்பிடிப்பின்போது செட்டுக்கு விருந்தினராக சென்ற நடிகர் சூர்யா படபிடிப்பு குழுவினருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது. காதலை மையப்படுத்திய குடும்பப் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
» ஷங்கரின் ஃபார்முலாவும் பிரமாண்டமும் - கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ அறிமுக வீடியோ எப்படி?
» மருத்துவமனையில் புஸ்ஸி ஆனந்திடம் நலம் விசாரித்த நடிகர் விஜய்
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago