ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘டன்கி’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘முன்னா பாய் எம்பிபிஎஸ்’, ‘3 இடியட்ஸ்’, ‘பிகே’, ‘சஞ்சு’ ஆகிய பாலிவுட் படங்களின் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்த இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள புதிய படம் ‘டன்கி’. ‘பதான்’, ‘ஜவான்’ படங்களுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளியாகும் இப்படத்தில், டாப்ஸி, விக்கி கவுஷல், போமன் இரானி, விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ப்ரிதம் இசையமைத்துள்ள இப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், ஷாருக்கானின் பிறந்தநாளையொட்டி படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
டீசர் எப்படி? - பிரமாண்டங்களைத் தவிர்த்து தனது கதையை மட்டுமே நம்பி களமிறங்கும் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் வழக்கமான டச் இந்தப் படத்திலும் பிரதிபலிக்கிறது. லண்டன் செல்ல ஆசைப்படும் 5 பேரின் கதையை ஜாலியாகவும், உணர்வுபூர்வமாகவும் திரை ஆக்கம் செய்திருப்பதை உணர முடிகிறது. டீசரின் முதல் காட்சி சீரியஸாகவும், அடுத்தடுத்த காட்சி நகைச்சுவையுடனும் நகர்கிறது.
நடுத்தர குடும்பத்து இளைஞனாக நீண்ட நாட்களுக்குப் பிறகு ஷாருக்கானை பார்ப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாகியுள்ளது. படம் ‘டாங்கி ஃப்ளைட்’ (கழுதை பயணம்) எனப்படும் சட்டத்துக்கு புறம்பான வெளிநாட்டு பயணங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதை படத்தின் டைட்டிலும், டீசரின் காட்சிகளும் உறுதிபடுத்துகின்றன. படம் டிசம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. டீசர் வீடியோ;
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago