சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தின் அறிமுக வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமை வெளியிடுகிறார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம், ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இதில் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. இந்தப் படத்தில் முக்கிய வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் நீளம் கருதி படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ‘இந்தியன் 2’ படத்தின் அறிமுக வீடியோ நாளை (நவம்பர் 3) மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தமிழ் வெர்ஷனை நடிகர் ரஜினிகாந்த் வெளியிடுகிறார். இந்தி வெர்ஷனை நடிகர் ஆமீர்கானும், தெலுங்கு வெர்ஷனை இயக்குநர் ராஜமவுலியும், கன்னட வெர்ஷனை கிச்சா சுதீப், மலையாள வெர்ஷனை மோகன்லாலும் வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
» மீண்டும் அவெஞ்சர்ஸ்! - பழைய நடிகர்களிடம் மார்வெல் நிறுவனம் பேச்சுவார்த்தை
» சமூக வலைதளங்களில் இருந்து ‘பிரேக்’ - ‘லியோ’ வெற்றி விழாவுக்குப் பிறகு ரத்னகுமார் அறிவிப்பு
Their friendship that grew over the years has only got stronger with time! #SuperstarForUlaganayagan
'Superstar @rajinikanth will release 'Ulaganayagan' @ikamalhaasan & @shankarshanmugh's INDIAN-2 AN INTRO tomorrow at 5:30 PM #Indian2
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago