மீண்டும் அவெஞ்சர்ஸ்! - பழைய நடிகர்களிடம் மார்வெல் நிறுவனம் பேச்சுவார்த்தை

By செய்திப்பிரிவு

லாஸ் ஏஞ்சல்ஸ்: புதிய ‘அவெஞ்சர்ஸ்’ படத்துக்காக ராபர்ட் டவுனி ஜூனியர், ஸ்கார்லெட் ஜோஹன்ஸன், கிறிஸ் எவான்ஸ் உள்ளிட்ட பழைய நடிகர்களிடம் மார்வெல் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2008-ம் ஆண்டு 'அயர்ன் மேன்' திரைப்படத்துடன் மார்வல் சூப்பர் ஹீரோக்களின் மார்வல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (எம்சியு) என்று சொல்லப்படும் திரைப்பட வரிசை ஆரம்பமானது. தொடர்ந்து 'ஹல்க்', 'தோர்', 'கேப்டன் அமெரிக்கா' என அடுத்தடுத்து சூப்பர் ஹீரோ படங்களை வெளியாகி வரவேற்பை பெற்றன. இதில் 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' திரைப்படத்துடன் எம்சியு நான்காம் கட்டம் நிறைவடைந்தது. இதில் முக்கிய கதாபாத்திரங்களான அயர்ன்மேன், ப்ளாக் விடோ இறந்து போனதால், அதில் நடித்திருந்த ராபர்ட் டவுனி ஜூனியர், ஸ்கார்லெட் ஜோஹன்ஸன் ஆகியோர் மார்வெல் திரைப்படங்களிலிருந்து ஓய்வு பெற்றனர். அதேபோல கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரமும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதால், அதில் நடித்த கிறிஸ் எவான்ஸ் மார்வெல் திரைப்படங்களிலிருந்து விலகினார்.

இந்த நிலையில், மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் ஆறாம் கட்டத்தில் இடம்பெறும் திரைப்படங்களின் தலைப்புகளை மார்வெல் நிறுவனம் அறிவித்திருந்தது. அதில் ‘அவெஞ்சர்ஸ்: தி காங் டைனாஸ்டி’ மற்றும் ‘அவெஞ்சர்ஸ்: தி சீக்ரட் வார்’ ஆகிய இரு படங்கள் இடம்பெற்றிருந்தன. இதில் பழைய அவெஞ்சர்கள் இடம்பெறுவார்களா அல்லது கேப்டன் மார்வல், மிஸ் மார்வல், எடர்னல்ஸ் போன்ற புதிய சூப்பர் ஹீரோக்கள் இடம்பெறுவார்களா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் நீடித்து வந்தது.

இந்த நிலையில், இந்த புதிய ‘அவெஞ்சர்ஸ்’ படங்களில் நடிப்பதற்காக ராபர்ட் டவுனி ஜூனியர், ஸ்கார்லெட் ஜோஹன்ஸன், கிறிஸ் எவான்ஸ் உள்ளிட்ட பழைய 'அவெஞ்சர்ஸ்’ நடிகர்களிடம் மார்வெல் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக தனது படத்தில் இடம்பெறும் கேமியோக்களை ரகசியமாக வைத்திருப்பது மார்வெல் நிறுவனத்தின் வழக்கம் என்பதால், புதிய ‘அவெஞ்சர்ஸ்’ படங்களில் ரசிகர்களுக்கு ஏராளமான சர்ப்ரைஸ் அம்சங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்