லக்னோ: கங்கனா ரனாவத் நடித்து தமிழில் வெளியான ‘சந்திரமுகி 2’ எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் அவர் நடித்த இந்தி படமான தேஜஸ் அக். 27-ம் தேதி வெளியானது. சர்வேஷ் மேவாராஇயக்கியுள்ள இந்தப் படத்தில் கங்கனா விமானப்படை அதிகாரியாக நடித்துள்ளார். அன்சுல் சவுகான், ஆசிஷ் வித்யார்த்தி, விஷாக் நாயர் உட்பட பலர் நடித்துள்ளனர். வெளியான முதல் நாளில் இருந்தே இந்தப் படம் வசூலில் சரிவைச் சந்தித்து வருகிறது. பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இதையடுத்து வீடியோஒன்றை வெளியிட்ட கங்கனா, “திரையரங்குகளுக்குச் சென்று படங்களைக் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பார்த்து மகிழுங்கள். இல்லை என்றால் திரையரங்கை நடத்துகிறவர்கள் வாழ முடியாது” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு இந்தப் படம் லக்னோவில் சிறப்புக் காட்சியாகத் திரையிடப்பட்டது. அவருடன் அமைச்சர்கள் தயாசங்கர் சிங், தரம்பால் சிங் ஆகியோரும் படத்தைப் பார்த்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
இதுபற்றி கங்கனா கூறும்போது, “படத்தைப் பார்த்துவிட்டு யோகி ஆதித்யநாத் கண் கலங்கினார்.அவர் எங்களை ஆதரிப்பதாகவும் இந்தப் படத்துடன் தொடர்பு கொள்ளதேசப்பற்றுள்ளவர்களை ஊக்கப்படுத்துவதாகவும் தெரிவித்தார். இது பெண்களின் சக்தியைப் பற்றிய படம்” என்றார்
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago