சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நர்ஸ் ஆக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியுள்ளது. இதை துவாரகா புரொடக்ஷன்ஸ் சார்பில் பிளாஸி கண்ணன் தயாரிக்கிறார்.யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, சந்தானபாரதி, அர்ஜுன் சிதம்பரம், பகவதி பெருமாள் உட்பட பலர் நடிக்கின்றனர். தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசை அமைக்கிறார்.
படத்தை இயக்கும் சவரிமுத்து கூறும் போது, “நான் விஸ்வாசம், அண்ணாத்த உட்பட சில படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறேன். மார்க் ஆண்டனி படத்துக்குத் திரைக்கதை எழுதினேன். இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறேன். இது காமெடித்ரில்லர் கதையை கொண்ட படம். ஐஸ்வர்யா ராஜேஷ் நர்ஸாக நடிக்கிறார். யோகிபாபு படம் முழுவதும் வரும் கேரக்டர். மருத்துவமனை பின்னணியில் நடக்கும் கதை இது. படத்துக்காக கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்டமான மருத்துவமனை செட் அமைக்க இருக்கிறோம். அனைவருக்கும் பிடிக்கும் விதமாக இதன் காட்சி அமைப்புகள் இருக்கும். இதுவரை காமெடி த்ரில்லர் படங்கள் வந்திருந்தாலும் அதிலிருந்து மாறுபட்டு இந்தப் படம் இருக்கும். படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது” என்றார்
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
2 days ago