‘உலகம் சுற்றும் வாலிபன்’ 50-வது ஆண்டு பொன் விழா: நவ.5-ல் நடக்கிறது

By செய்திப்பிரிவு

சென்னை: எம்.ஜி.ஆர், தயாரித்து, இயக்கி நடித்து, 1973-ம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘உலகம் சுற்றும் வாலிபன்’. இதில் மஞ்சுளா, லதா, சந்திரகலா, நம்பியார், மனோகர், அசோகன், நாகேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். தாய்லாந்து நடிகை மேட்டா ரூங்ராத்தும் நடித்திருந்தார்.

சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஜப்பான் நாடுகளில் இதன் படப்பிடிப்பு நடந்தது. பச்சைக்கிளி முத்துச்சரம், உலகம் அழகு கலைகளின் சுரங்கம், நிலவு ஒரு பெண்ணாகி போன்ற மெகா ஹிட் பாடல்களுடன் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்த இந்தத் திரைப்படம் 2௦௦ நாட்களுக்கு மேல் ஓடி சாதனைப் படைத்தது. இந்தப் படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆவதை ஓட்டி, இதன் பொன் விழாவை எம்.ஜி.ஆர்.ரசிகர்கள், வரும் 5-ம் தேதி நடத்துகின்றனர்.

சென்னை தி.நகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் கலையரங்கத்தில் இந்த விழா நடக்கிறது. இதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகை லதா, புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். ஏராளமான எம்.ஜி.ஆர்.ரசிகர்களும் இதில் கலந்துகொள்ள இருக்கின்றனர். காலை 1௦ மணி முதல் இரவு வரை விழா நடக்கிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்