“திரையரங்கு சென்று படம் பாருங்கள்” -  ரசிகர்களுக்கு கங்கனா வேண்டுகோள் 

By செய்திப்பிரிவு

இந்தி நடிகையான கங்கனா ரனாவத் ராகவா லாரன்ஸுடன் நடித்த ‘சந்திரமுகி 2’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் அவர் நடித்துள்ள இந்திப் படமான ‘தேஜஸ்’, கடந்த 27-ம் தேதி வெளியானது. சர்வேஷ் மேவாரா இயக்கிய இந்தப் படத்தில் அவர் விமானப்படை அதிகாரியாக நடித்துள்ளார்.

அன்சுல் சவுகான், ஆசிஷ் வித்யார்த்தி, விஷாக் நாயர் உட்பட பலர் நடித்துள்ளனர். படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூலில் சரிவைச் சந்தித்து வருகிறது. கூட்டம் இல்லாததால் பல திரையரங்கங்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், நடிகை கங்கனா ரசிகர்களுக்குக் கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கரோனாவுக்கு முன்பே திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவது குறைந்தது. அதற்குப் பின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இலவச டிக்கெட்டுகள் உட்பட நியாயமான சலுகைகள் வழங்கப்பட்டும் பல திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன.

அந்தச் சரிவு தொடர்கிறது. அதனால், திரையரங்குகளுக்குச் சென்று படங்களைக் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பார்த்து மகிழுங்கள். இல்லை என்றால் திரையரங்கை நடத்துகிறவர்கள் வாழ முடியாது” என்று தெரிவித்துள்ளார். கங்கனா, இந்திரா காந்தியாக நடித்து இயக்கியுள்ள ‘எமர்ஜென்சி’ படம் அடுத்து வெளியாக இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்