சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வெளியான 7 நாட்களில் உலக அளவில் ரூ.461 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான ‘லியோ’ திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148.5 கோடி வசூலை ஈட்டியதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. தொடர்ந்து விடுமுறை நாட்களால் படத்தின் வசூல் கூடியதை அடுத்து, 4 நாட்களில் உலக அளவில் ரூ.400 கோடியை ‘லியோ’ ஈட்டியது.
இந்நிலையில், படம் வெளியாகி 7 நாட்கள் கடந்த நிலையில், உலக அளவில் இதுவரை ரூ.461 கோடிக்கும் அதிகமான வசூலை ‘லியோ’ ஈட்டியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரூ.250-350 கோடி பட்ஜெட்டுக்குள் உருவானதாக கூறப்படும் இப்படம் முதல் வாரத்தில் பட்ஜெட்டைத்தாண்டி வசூலித்துள்ளது. தீபாவளி வரை பெரிய படங்கள் எதுவும் அடுத்து ரிலீஸ் இல்லை என்பதால் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் ஒட்டுமொத்த வசூலான ரூ.600 கோடியை ‘லியோ’ நெருங்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
33 mins ago
சினிமா
52 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago