6 நாட்களில் ரூ.100 கோடி வசூலைக் கடந்த ‘பகவந்த் கேசரி’

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: பாலகிருஷ்ணா நடித்த ‘பகவந்த கேசரி’ திரைப்படம் வெளியான 6 நாட்களில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது.

பாலகிருஷ்ணாவின் 108-வது படமாக உருவாகியுள்ள ‘பகவந்த் கேசரி’ படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்ட்டில் ஷைன்ஸ் ஸ்கீரின் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. தமன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். காஜல் அகர்வால், ஸ்ரீலீலா, சரத்குமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் அக்டோபர் 19-ம் தேதி வெளியான இப்படம் முதல் நாள் உலக அளவில் ரூ.32 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில் ஆறு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் இப்படம் ரூ.70 கோடியை நெருங்கியுள்ளது. தசரா விடுமுறைக்குப் பிறகு படத்தின் வசூலில் மிகப்பெரிய இறக்கம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த வார இறுதியில் வசூல் அதிகரிக்கலாம் என்று சினிமா நிபுணர்கள் கூறுகின்றனர்.

பெரும் பொருட்செலவில் உருவாகி இப்படத்துடன் வெளியான ரவிதேஜாவின் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ திரைப்படம் வசூலில் பின்தங்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

46 mins ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்