இரட்டை இயக்குநர்கள் படத்தில் வைபவ்-அதுல்யா ரவி

By செய்திப்பிரிவு

சென்னை: பிடிஜி யுனிவர்சல் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரிக்கும் படத்தில், வைபவ் ஹீரோவாக நடிக்கிறார். அதுல்யா ரவி நாயகியாக நடிக்கிறார். ஆனந்த்ராஜ், ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, இளவரசு, பி.எல். தேனப்பன் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர்.

டி.இமான் இசையமைக்கும் இப்படத்துக்கு டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்கிறார். இரட்டை இயக்குநர்களான விக்ரம் ராஜேஷ்வர் - அருண் கேசவ் இயக்குகின்றனர். இதில் விக்ரம் ராஜேஷ்வர், இயக்குநர் கே.ராஜேஷ்வரின் மகன். படம்பற்றி அவர் கூறியதாவது: இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கி இருக்கிறேன். அதன் அடிப்படையில் இந்தப் படத்தை இயக்குகிறோம். படத்தைச் சேர்ந்து இயக்கும் அருண் கேசவ் எனது சகோதரர்தான். இது முழுநீள காமெடி படம். கொள்ளையடிக்கப் போகும் ஒரு கும்பலைச் சுற்றி நடக்கும் விஷயங்கள்தான் கதை. இதில் ஹீரோ வைபவும் அவர் சகோதரர் சுனில் ரெட்டியும் முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர். தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் மென்பொருள் துறையைச் சேர்ந்தவர். பல்வேறு துறைகளிலும் தடம் பதித்துள்ள அவர் இந்தப் படம் மூலம் சினிமா தயாரிப்பிலும் இறங்கியுள்ளார்.

இவ்வாறு விக்ரம் ராஜேஷ்வர் கூறினார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்