சென்னை: எதிர்வரும் தீபாவளி திருநாள் அன்று கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடலான ‘ஜரகண்டி’ பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்திய சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்குகிறார். படத்தில் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், அஞ்சலி, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மூலம், தில் ராஜு தயாரிக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. படக்குழு தசரா வாழ்த்துகளை தெரிவித்து எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளது. தீபாவளி திருநாளன்று படத்தின் முதல் பாடல் ‘ஜரகண்டி’ வெளியாகும் என இந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளது. அரசியல் பின்னணியில் உருவாகும் இந்தப் படம் அடுத்த வருடம் ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
» “இந்த தோல்வி எங்களுக்கு வலி கொடுக்கிறது” - பாக். கேப்டன் பாபர் அஸம்
» ODI WC 2023 | சென்னையில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபாரம்!
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago