சென்னை: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தனது தாயை கவனித்துக் கொள்வதற்காக நடிகர் ஆமீர்கான் அடுத்த 2 மாதங்கள் சென்னையில் தங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடிகர் ஆமீர்கானின் தயாருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தன் தாயைப் பார்த்துகொள்ளும் பொருட்டு சென்னையில் அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு அருகில் உள்ள ஹோட்டலில் அடுத்த 2 மாதங்கள் நடிகர் ஆமீர்கான் தங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் அவர் தனது நேர்காணல் ஒன்றில் கூட தன் தாயையும், ஜுனைத், ஈரா மற்றும் ஆசாத் ஆகிய மூன்று குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள திரைத்துறையிலிருந்து சில காலம் விலகியிருக்கப் போவதாக அறிவித்திருந்தார்.
தன் குடும்பத்தின் மீது தான் வைத்துள்ள அன்பைக் குறித்து கூறுகையில், “சினிமா தான் என்னை என் குடும்பத்திலிருந்து விலக்கி வைத்திருக்கிறது என்று சினிமாவின் மீது நான் கோபம் கொண்டேன். பிறகு என் வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து ‘என் வேலையை முடித்துவிட்டேன். இனிமேல் உங்கள் அனைவருடனும் நேரத்தை செலவிட முடிவு செய்துள்ளேன்’ என்று தெரிவித்தேன்” என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago