‘லியோ’ ரகசியம் காத்தேன்: மடோனா செபாஸ்டியன் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘லியோ’ படம் கடந்த 19-ம் தேதி வெளியானது. அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதில் மடோனா செபாஸ்டியன், நடிகர் விஜய்யின் சகோதரியாக கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இதில் நடித்தது பற்றி அவர் கூறியதாவது:

லியோ படத்தில் என் கேரக்டர் பற்றிய ரகசியத்தை யாரிடமும் சொல்லவில்லை. படத்தின் பாடல் வெளியீடு நடந்திருந்தால் நான் அதில் கலந்துகொண்டிருப்பேன். அது நடக்கவில்லை என்பதால், கடைசிவரை என் கதாபாத்திரத்தை யாரிடமும் சொல்லவில்லை. ‘லியோ’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம். இயக்குநர் லோகேஷ் முதலில் எனது கதாபாத்திரம் பற்றி சொல்லவில்லை. படப்பிடிப்பில்தான் காட்சிகளை விளக்கினார். அது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இந்தப் படத்துக்காக அன்பறிவ் மாஸ்டர்கள் 2 வருடங்களுக்கு முன்பு எனக்கு ஆக்‌ஷன் பயிற்சி அளித்தார்கள். விஜய்யுடன் இப்படியொரு கேரக்டரில் நடிக்க கிடைத்த வாய்ப்பை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்.

நான் விஜய்க்கு சகோதரியாக நடிக்கிறேன் என்பது என் அம்மாவுக்கு மட்டும் தெரியும். நெருங்கிய நண்பர்களிடம் கூட சொல்லவில்லை. ஆனாலும் நான் நடிக்கிறேன் என்ற செய்தி வெளியே கசிந்துவிட்டது. விஜய்யுடன் நான் நடித்த ‘நான் ரெடி’ பாடலை 3 நாட்களில் படமாக்கினார்கள். விஜய் அமைதியானவர். அதிகம் பேசமாட்டார். அவர் மீது எனக்கு அதிக மரியாதை இருக்கிறது. இவ்வாறு மடோனா செபாஸ்டியன் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்