நடிகர் கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் நடித்துள்ள ‘ஜப்பான்’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது. கார்த்தியின் 25-ஆவது படமான இதில் அனு இம்மானுவேல் நாயகியாக நடிக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதையடுத்து அவர் நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் அடுத்த ஷெட்யூல் சென்னையில் நேற்று தொடங்கியுள்ளது.
இதில் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக ராஜ்கிரண் நடிக்கிறார். அவர் பேரனாக நடிகர் கார்த்தி நடிக்கிறார். அவரும் எம்.ஜி.ஆர் ரசிகராகவே வருகிறார். ஒரு காட்சியில் அவர் எம்.ஜி.ஆர் கெட்டப்பில் வருகிறார். பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி வரும் இதில் பாடல்களுக்கும் ஆக்ஷனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.