சென்னை: விளம்பர படப்பிடிப்புக்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் தமிழ் நடிகர் யோகி பாபு இணைந்துள்ள புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
இந்த விளம்பரத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். ஷூட்டிங் முடிந்த பிறகு மூவரும் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வீடியோ எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது. ரியல் எஸ்டேட் விளம்பரம் ஒன்றில் தோனியுடன் யோகி பாபு இணைந்து நடித்துள்ளார். இதனை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். சமீபத்தில்தான் இதன் ஷூட்டிங் முடிந்துள்ளது.
தோனியை இயக்கியது குறித்து விக்னேஷ் சிவன், "நான் மிகவும் விரும்பிய ஒன்றை செய்துவிட்டேன். நான் மிகவும் மதிக்கும் ஒருவரும் எனது ரோல் மாடலுமான ஒருவரை இயக்கிவிட்டேன். அவருக்கு 'ஆக்ஷன்' என சொல்லிவிட்டேன். சொல்வதை கடந்து நான் மிகவும் விரும்பும் ஒரு நட்சத்திரம். நான் எப்போதும் நிமிர்ந்து பார்க்கும் ஒரு ரோல் மாடல் கேப்டன் தோனி" என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தோனி தனது படத்தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படமாக எல்.ஜி.எம் என்ற தமிழ் படத்தை தயாரித்தார். இதில் ஹரீஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்தனர். இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடந்தபோது கிரிக்கெட் விளையாட்டு பிரியரான யோகி பாபு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தனக்கு வாய்ப்பு வழங்குமாறு தோனியிடம் வேடிக்கையாக கேட்டார்.
இதற்கு “ராயுடு ஓய்வு பெற்றுவிட்டார். அதனால் சிஎஸ்கே அணியில் உங்களுக்கான இடம் உள்ளது. நான் அணி நிர்வாகத்திடம் பேசுகிறேன். ஆனால், நீங்கள் படங்களில் மும்முரமாக நடித்து வருகிறீர்கள். நான் சொல்கிறேன். நீங்கள் கன்சிஸ்டியுடன் விளையாட வேண்டும். உங்களை காயப்படுத்தும் வகையில் பந்து வீச்சாளர்கள் பந்தை வேகமாக வீசுவார்கள்” என தோனி பதில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago