அஜர்பைஜான்: அஜித்குமார் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 54.
இது தொடர்பாக வெளியான தகவலின்படி, அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் கலை இயக்குநராக மிலன் பணியாற்றிவருகிறார். நேற்று இரவு ஷூட்டிங் முடிந்துவிட்டு ஹோட்டலுக்குச் சென்ற படத்தின் மிலன், இன்று காலை படப்பிடிப்புக்கான வேலைகள் நடைபெற்றுகொண்டிருக்கும்போது, அசவுகரியமாக உணர்வதாகக் கூறியதையடுத்து அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தகவலை அறிந்த நடிகர் அஜித்குமார், இயக்குநர் மகிழ்திருமேனி, ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று பார்க்கும்போது மிலன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கலை இயக்குநர் மிலன்: அஜித், விஜய்யின் முக்கியமான படங்களில் மிலன் பணியாற்றியுள்ளார். ‘பில்லா’, ‘வேலாயுதம்’, ‘வீரம்’, ‘வேட்டைக்காரன்’, ‘அண்ணாத்த’, ‘பத்து தல’, உள்ளிட்ட ஏராளமான படங்களில் பணியாற்றியுள்ளார். ‘சிட்டிசன்’, ‘தமிழன்’, ‘ரெட்’, ‘வில்லன்’ படங்களில் சாபு சிரிலுடன் உதவி கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். சூர்யாவின் ‘கங்குவா’ படத்தில் அவர் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago