“குறிப்பிட்ட மொழிக்குள் சிக்க விரும்பவில்லை” - மிருணாள் தாக்குர்

By செய்திப்பிரிவு

பிரபல இந்தி நடிகை மிருணாள் தாக்குர், ‘சீதாராமம்’ படம் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட தென்னிந்திய மொழிகளிலும் பிரபல மானார். இவர் இப்போது தெலுங்கில் நானியுடன் ‘ஹாய்நான்னா’, விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கும் படம் என நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தான் குறிப்பிட்ட ஒரு வட்டத்துக்குள் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மிருணாள் தாக்குர் கூறும்போது, “எனக்கு அனைத்துவிதமான படங்களிலும் நடிக்க ஆசை. குறிப்பிட்ட ஒரு வட்டத்துக்குள்ளோ, மொழிக்குள்ளோ சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. அனைத்து மொழி சினிமாவும் சிறந்ததுதான். கதை, திரைக்கதை, கதாபாத்திரங்களின் பன்முகத் தன்மைதான் முக்கியமானது.

பார்வையாளர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். நடிகர்களை புதிய, வித்தியாசமான வேடங்களில் பார்க்க அவர்கள் ஆசைப்படுகிறார்கள். ஒரு நடிகையாக, என் இருப்புக்கான அடிப்படை அதுதான். ரசிகர்கள் விரும்பும் திரைப்படங்கள் மற்றும் கதாபாத்திரங்களில் நடிப்பது எப்போதும் சவாலாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

20 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்