சினிமா ஹீரோக்களை சுற்றியே வருகிறது: டாப்ஸி வருத்தம்

By செய்திப்பிரிவு

மும்பை: நடிகை டாப்ஸி பன்னு, தக் தக் என்ற இந்திப் படத்தில் நடித்திருக்கிறார். இதில் நடிகைகள் ரத்னா பதக், தியா மிர்ஸா, ஃபாத்திமா சனா ஷேக், சஞ்சனா சங்கி ஆகியோரும் நடித்துள்ளனர். வெவ்வேறு பின்னணியில் இருந்து வந்த நான்கு பெண்கள், பைக்கில் சாலைப் பயணம் மேற்கொள்ளும்போது தங்கள் வாழ்வை எப்படிக் கண்டடைகிறார்கள் என்பது கதை. இந்தப் படம் நேற்று வெளியானது.

இதுபற்றி நடிகை டாப்ஸி பேசும்போது, “சினிமாவின் மொத்த சிஸ்டமும் ஹீரோக்களை சுற்றியே இருக்கிறது. ஓடிடி உட்பட அனைத்தும் அப்படியே இருக்கிறது. இந்தப் படம் பற்றி, “இது பெண்கள் சார்ந்த கதை, இதற்கு இத்தனை ஷோ கிடைக்காது. ஓடிடி-யில்தான் வெளிவருமே, பிறகென்ன கவலை?” என்று பேசப்பட்டதை அறிந்தேன். இந்தப் படம் ‘ஜவான்’ இல்லைதான். இதுபோன்ற சிறு பட்ஜெட் படங்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அந்தப் படங்களை ஏற்கவோ, நிராகரிக்கவோ ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். வெறும் ஒன்று அல்லது இரண்டு காட்சிகள்மட்டுமே வழங்கினால், அது கவனிக்கப்படாமல் போகும். பிறகு எல்லோரும் அதை எளிதாகத் தோல்வி படம் என்று முத்திரைக் குத்திவிடுவார்கள். பிறகு யாராவது ஓடிடி-யில் பார்ப்பார்களா? இது எரிச்சலைத் தருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்