சென்னை: ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள படம் ‘விடாமுயற்சி’. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் த்ரிஷா நடிக்க உள்ளதாக தெரிகிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்புக்காக அஜித், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் சமீபத்தில் அஜர்பைஜான் சென்றனர். இந்த நிலையில் அஜித் நடிக்கும் 63வது படத்தை ‘மார்க் ஆண்டனி’ இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
’நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பின்போது ஆதிக் சொன்ன கதை அஜித்துக்கு பிடித்திருந்ததாகவும், தற்போது அந்த கதையை படமாக்குவதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. கதை இறுதியானால் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவான 'மார்க் ஆண்டனி’ திரைப்படம், கடந்த செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படத்தை மினி ஸ்டூடியோ சார்பில் வினோத்குமார் தயாரித்துள்ளார். இதில் ரிது வர்மா நாயகியாக நடித்துள்ளார். டைம் ட்ராவலை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இப்படம் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago