“சினிமாவுக்கு போய் என்ன கிழிக்க போகிறாய் என கேட்டனர்” - நடிகை அபர்ணதி பகிர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: “சினிமாவுக்கு போய் என்ன கிழிக்க போகிறாய் என கேட்டனர்” என்று தனது கடந்த கால அனுபவங்களை நடிகை அபர்ணதி பகிர்ந்துள்ளார்.

இறுகப்பற்று’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகை அபர்ணதி, “இந்தப் படத்தில் நடித்தற்காக எனக்கு நானே முதலில் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். படம் பார்த்து வரவேற்பு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி. நான் சினிமாவுக்குள் வருவதற்கு முன்பு என் அப்பாவின் நண்பரின் மகன் ‘நீ சினிமாவுக்கு போய் என்னத்த கிழிக்க போற’ என கேட்டார்.

இன்று துபாயில் படம் ரிலீஸாகிறது. படத்தின் டிக்கெட்டை கிழித்துவிட்டு ‘இறுகப்பற்று’ படத்தை அவர் பார்க்கப் போகிறார். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு நன்றி. பல படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் எதுவும் முழுமை கொடுக்கவில்லை. இப்போதுதான் சினிமாவில் வெற்றியைப் பார்க்கிறேன். இப்படியான வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. விதார்த் ‘மைனா’ படத்துக்கு இணையான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருந்தார். விக்ரம் பிரபு, ஸ்ரீ என எல்லோரும் சிறப்பாக நடித்திருந்தனர். இப்படியான அழகான படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தற்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்