போதைப் பொருள் வழக்கு: நடிகர் நவ்தீப்பிடம் 8 மணிநேரம் விசாரணை

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ஹைதராபாத் புறநகர் பகுதியான மாதாப்பூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், ஆக.30ம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது நைஜீரியாவைச் சேர்ந்தவர், திரைப்பட பைனான்சியர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், நடிகர் நவ்தீப்புக்கு இதில் தொடர்பு இருப்பதாகத் தெரிய வந்தது. இதில் பெருமளவு பணமோசடி நடந்திருக்கும் என சந்தேகித்த போலீஸார், அமலாக்கத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் நவ்தீப்பிடம் கடந்த மாதம், 6 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

அப்போது, செல்போனில் இருந்த சில தகவல்களை நவ்தீப் அழித்து இருந்ததால் அதை போலீஸார் பறிமுதல் செய்தனர். அந்த தகவல்களை மீட்டு எடுத்த பிறகு மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் என்று கூறியிருந்தனர். அதன்படி நேற்று முன் தினம் அவரிடம் அமலாக்கத்துறையினர் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அதில் அவருக்கு இருந்த 3 வங்கிக் கணக்குகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அவர் கூறிய வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டன. மீண்டும் தேவைப்படும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அவரிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்