ஸ்ரீலீலாவுக்கு திருமணமா?

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் ஸ்ரீலீலா. மகேஷ் பாபுவின் ‘குண்டூர் காரம்’ படத்தில் நடிக்கும் அவர், ஏராளமான படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். பாலகிருஷ்ணாவுடன் அவர் நடித்துள்ள ‘பகவந்த் கேசரி’ வரும் 19ம் தேதி வெளியாகிறது. இதில் ஸ்ரீலீலா அவர் மகளாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பில், பாலகிருஷ்ணாவின் மகன் மோக்‌ஷக்னாவுடன் அவர் சுற்றி வந்ததாகச் செய்திகள் வெளியானது. இந்நிலையில் நடிகை ஸ்ரீலீலாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. இதை அவர் தரப்பு மறுத்துள்ளது.

“காதலுக்கும் திருமணத்துக்கும் இப்போது நேரமில்லை. அதனால் இந்த யூகங்களை நம்ப வேண்டாம். அவர் நடிப்பில் ‘பகவந்த் கேசரி’, ‘ஆதிகேசவா’ படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன. குண்டூர் காரம், உஸ்தாத் பகத்சிங், எக்ஸ்ட்ராடினரி மேன் ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார்” என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்