சென்னை: விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்ற தகாக வார்த்தையை படக்குழு மியூட் செய்துள்ளது.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம், ‘லியோ’. சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம் வரும் 19ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி, வரவேற்பைப் பெற்றது. ட்ரெய்லரின் ஒரு இடத்தில் விஜய் பேசும் தகாத வார்த்தை ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தொடர்ந்து பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், ‘லியோ’ ட்ரெய்லரில் இடம்பெற்ற அந்த வார்த்தையை தற்போது படக்குழு மியூட் செய்துள்ளது. ஏற்கெனவே படத்தைப் பார்த்த தணிக்கை குழு இதில் 13 இடங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. மேலும் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழும் வழங்கப்பட்டது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் இந்த வார்த்தை குறித்து பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “ட்ரெய்லரில் அந்த இடத்தில் தேவைப்பட்டதால் வைத்தேன். யார் மனதையும் புண்படுத்த பயன்படுத்தவில்லை. இதற்கு முற்றிலும் நானே பொறுப்பேற்றுகொள்கிறேன். இது நடிகர் விஜய் பேசிய வார்த்தை கிடையாது. லியோவில் பார்த்திபன் எனும் அந்தக் கதாபாத்திரம் பேசும் வார்த்தை தான்” என்று கூறியிருந்தார். திருத்தம் செய்யப்பட்ட ’லியோ’ ட்ரெய்லர் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago