சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம், 'லியோ'. சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் 19-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதை
யடுத்து அவர் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம் உட்பட பலர் நடிக்கின்றனர்.
விஜய்யின் 68 வது படமான இதற்கு, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. முதலில் பாடல் காட்சி படமாக்கப்
பட்டது. நட்பு பற்றிய இந்தப் பாடலில், விஜய், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் இணைந்து பங்கேற்றுள்ளனர். ராஜு சுந்தரம் நடனம் அமைத்துள்ள இந்தப் பாடல், படத்தின் ஓபனிங் பாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. அடுத்த ஷெட்யூல் விரைவில் சென்னையில் தொடங்க இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago