ஜெகன் மோகனின் அரசியல் பயோபிக்: ஜீவா, மம்மூட்டியின் ‘யாத்ரா 2’ முதல் தோற்றம்

By செய்திப்பிரிவு

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் வாழ்க்கையைத் தழுவி உருவாகும் ‘யாத்ரா 2’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையைத் தழுவி கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் ‘யாத்ரா’. மஹி வி ராகவ் இயக்கிய படத்தில் ஒய்.எஸ்.ஆர் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். தெலுங்கில் வெளியான இப்படத்தின் அடுத்த பாகம் தற்போது உருவாகியுள்ளது. ‘யாத்ரா 2’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தையும் முதல் பாகத்தின் இயக்குநர் மஹி வி ராகவே இயக்கியிருக்கிறார்.

இரண்டாம் பாகத்தை பொறுத்தவரை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனும், ஆந்திராவின் தற்போதைய முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிவருகிறது. இதில் ஜெகன் மோகன் ரெட்டியாக ஜீவா நடிக்கிறார். முந்தைய பாகத்தில் ஒய்.எஸ்.ஆர் கதாபாத்திரத்தில் நடித்த மம்மூட்டி இந்த பாகத்திலும் இடம்பெற்றுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜீவாவும், மம்மூட்டியும் இடம்பெற்றுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்